பாடியவர்: பெரும்பதுமனார் திணை: பாடாண் துறை: பரிசில் கடா நிலை
கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம் நெருநல் உண்டனம் என்னாது, பின்னும் செலவுஆ னாவே, கலிகொள் புள்ளினம்; அனையர் வாழியோ இரவலர்; அவரைப் புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர் உடைமை ஆகும், அவர் உடைமை; அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே.