சூளா மணியும்பர்க்(கு) ஆயவன் சூழ்பொழில் தில்லையன்னாய்க்(கு)
ஆளா ஒழிந்ததென் ஆருயிர் ஆரமிழ் தேஅணங்கே
தோளா மணியே பிணையே பலசொல்லி என்னைதுன்னும்
நாளார் மலர்பொழில் வாய்எழில் ஆயம் நணுகுகவே. .. 47
கொளு
தேங்கமழ் சிலம்பன் பாங்கிற் கூட்டியது

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework