துறை: விறலியாற்றுப்படை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: செங்கை மறவர்

யாமும் சேறுக நீயிரும் வம்மின்
துயிலுங் கோதைத் துளங்(கு)இயல் விறலியர்
கொளைவல் வாழ்க்கைநும் கிளைஇனி(து) உணீஇயர்
களிறுபரந்(து) இயலக் கடுமா தாங்க
ஒளிறுகொடி நுடங்கத் தேர்தி஡஢ந்து கொட்ப 5
எஃகுதுரந்(து) எழுதரும் கைகவர் கடும்தார்
வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
மொய்வளம் செருக்கி மொசிந்துவரு மோகூர்
வலம்படு குழூஉநிலை அதிர மண்டி
நெய்த்தோர் தொட்ட *செங்கை மறவர்* 10
நிறம்படு குருதி நிலம்படர்ந்(து) ஓடி
மழைநாள் புனலின் அவல்பரந்(து) ஒழுகப்
படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து
படுகண் முரசம் நடுவண் சிலைப்ப
வளன்அற நிகழ்ந்து வாழுநர் பலர்படக் 15
கருஞ்சினை விறல்வேம்(பு) அறுத்த
பெருஞ்சினைக் குட்டுவன் கண்டனம் வரற்கே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework