வேணில் அரையத்து இலையொலி வெரீஇப்போகில் புகாவுண்ணாது பிறிதுபுலம் படரும்வெம்பலை அருஞ்சுரம் நலியாதுஎம்வெம் காதலி பண்புதுணைப் பெற்றே.