பொன்செய் பாண்டில் பொலங்கலம் நந்தத்தேரகல் அல்குல் அவ்வரி வாடஇறந்தோர் மன்ற தாமே பிறங்குலைப்புல்லரை ஓமை நீடியபுலிவழங்கு அதர கானத் தானே.