கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக் காட்டிடை ஆட்டுவந்த
தவலங்கிலாச்சிவன் தில்லையன் னாய்தழு விம்முழுவிச்
கவலங் கிருந்தநம் தோன்றல் துணையெனத் தோன்றுதலால்
அவலங் களைந்து பணிசெயற் பாலை அரசனுக்கே. ... 389
கொளு
தோன்றலைத் துணையடு தோழி கண்டு
வான்தகை மடந்தையை வருத்தம் தணித்தது.

Go to top