இரவணை யும்மதி யேர்நுத லார்நுதிக் கோலஞ் செய்து
குரவணை யுங்குழல் இங்(கு)இவ ளால்இக் குறியறிவித்(து)
அரவணை யும்சடை யோன்தில்லை யூரனை ஆங்கொருத்தி
தரஅணை யும்பரி சாயின வாறுநம் தன்மைகளே. ... 360
கொளு
உலகியல் அறியச் செலவிடல் உற்ற
விழுத்தகை மாதர்க்கு அழுக்கஞ் சென்றது

Go to top