கருங்குவ ளைக்கடி மாமலர் முத்தங் கலந்திலங்க
நெருங்கு வளைக்கிள்ளை நீங்கற் றிலள்நின்று நான்முகனோ(டு)
ஒருங்கு வளைக்கரத் தான் உண ராதவன் தில்லையப்பாய்
மருங்கு வளைத்துமன் பாசறை நீடிய வைகலுமே. ... 331
கொளு
பாசறை முற்றிப் பைந்தொடியோ(டு) இருந்து
மாசறு தோழிக்கு வள்ளல் உரைத்தது.

Go to top