கானமர் குன்றர் செவியுற வாங்கு கணைதுணையா
மானமர் நோக்கியர் நோக்கென மான்நல் தொடைமடக்கும்
வானவர் வெற்பர்வண் தில்லையின் மன்னை வணங்கலர் போல்
தேனமர் சொல்லிசெல் லார்செல்லல் செல்லல் திருநுதலே. .. 274
கொளு
அழலுறு கோதையின் விழுமுறு பேதையை
நீங்கலரெனப் பாங்கி பகர்ந்தது

Go to top