ஆரடித்தார் ஏனழுதாய்
அடித்தாரைச் சொல்லி அழு
கண்ணே,  என் கண்மணியே
கடிந்தாரைச் சொல்லி அழு

கொப்புக்கனியே, கோதுபடா மாங்கனியே
வம்புக்கழுதாயோ, வாயெல்லாம் பால் வடிய
மாமன் அடித்தாரோ மல்லிகைப்பூ செண்டாலே
அத்தை அடித்தாளோ அல்லிப்பூ செண்டாலே

அடித்தாரைச் சொல்லி அழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
தொட்டாரைச் சொல்லி அழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்

ஆரும் அடிக்கவில்லை, ஐவிரலும் தீண்டவில்லை
அவனா அழுகின்றான் ஆத்தாள் மடிதேடி
தானா அழுகின்றான் தம்பி துணை வேணுமென்று
Go to top