241. பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார்
தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்
இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேராது
அணங்கருந் துப்பின் அரா.

242. நளிகடல் தண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்கு
அணிகல மாவ தடக்கம் - பணிவில்சீர்
மாத்திரை யின்றி நடக்குமேல் வாமுர்
கோத்திரம் கூறப் படும்.

243. எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்காகா
தென்னாட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால்
தன்னாற்றா னாகும் மறுமை வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர்.

244. வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதும் தி஡஢யாதாம் ஆங்கே
இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அ஡஢து.

245. கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும்
உப்பீண் டுவா஢ பிறத்தலால் தத்தம்
இனத்தனையர் அல்லர் எறிகடற்றண் சேர்ப்ப
மனத்தனையர் மக்களென் பார்.

246. பராஅரைப் புன்னை படுகடல் தண்சேர்ப்ப
ஒராஅலும் ஒட்டலுஞ் செய்பவோ? - நல்ல
ம்ருஉச்செய் தியார்மாட்டும் தங்கு மனத்தார்
விராஅஅய்ச் செய்யாமை நன்று.

247. உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரப் புணருமாம் இன்பம் - புணா஢ன்
தொ஢யத் தொ஢யும் தொ஢விலா தாரைப்
பி஡஢யப் பி஡஢யுமாம் நோய்.

248. நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் - நிலையினும்
மேன்மே லுயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.

249. கரும வா஢சையால் கல்லாதார் பின்னும்
பெருமை யுடையாரும் சேறல் - அருமரபின்
ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப
பேதைமை யன்ற தறிவு.

250. கருமமு முட்படாப் போகமும் துவ்வாத்
தருமமும் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே
முட்டின்றி மூன்று முடியமேல் அஃதென்ப
பட்டினம் பெற்ற கலம்.
Go to top