321. அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர் - பொருளல்லா
ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை
முழை சுவையுணரா தாங்கு.

322. அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால்
செவ்விய ரல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்விய கொளல்தேற்றா தாங்கு.

323. இமைக்கும் அளவிற்றம் இன்னுயிர்போம் மார்க்கம்
எனைத்தானும் தாங்கண் டிருந்தும் - தினைத்துணையும்
நன்றி பு஡஢கல்லா நாணின் மடமாக்கள்
பொன்றிலென் பொன்றாக்கா லென்?

324. உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால்,
பலர்மன்னுந் து஡ற்றும் பழியால், - பலருள்ளும்
கண்டாரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன்
தண்டித் தனிப்பகை கோள்.

325. எய்தி யிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
வைதான் ஒருவன் ஒருவனை - வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
வியத்தக்கான் வாழும் எனின்.

326. மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை
ஊக்கி அதன்கண் முயலாதான் - நு஡க்கிப்
புறத்திரு போகென்னும் இன்னாச்சொல் இல்லுள்
தொழுத்தையால் கூறப் படும்.

327. தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்
ஏமஞ்சார் நன்னெறியும் சேர்கலார் - தாமயங்கி
ஆக்கத்துள் து஡ங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார் புல்லறிவி னார்.

328. சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளிங்கா யாம்.

329. வெறுமை யிடத்தும் விழிப்பிணிப் போழ்தும்
மறுமை மனத்தாரே யாகி - மறுமையை
ஐந்தை யனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார்.

330. என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்
கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை - அன்னோ
அளவிறந்த காதற்றம் ஆருயி ரன்னார்க்
கொளஇழைக்கும் கூற்றமும் கண்டு.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework