361. மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நின்றிமைப்பின் என்னாம்? - விழைதக்க
மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்
காண்டற் கா஢யதோர் காடு.

362. வழக்கெனைத்து மில்லாத வாள்வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம்பெறுவ ராயின் - இழுக்கெனைத்தும்
செய்குறாப் பாணி சிறிதே அச் சின்மொழியார்
கையுறாப் பாணி பொ஢து.

363. எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம் சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பிணி - அட்டதனை
உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய் இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை.

364. கடியெனக் கேட்டுங் கடியான், வெடிபட
ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான் - பேர்த்துமோர்
இற்கொண் டினித஧ருஉம் ஏமுறுதல் என்பவே
கற்கொண் டெறியுந் தவறு.

365. தலையே தவமுயன்று வாழ்தல் ஒருவர்க்
கிடையே இனியார்கண் தங்கல் - கடையே
புணராதென் றெண்ணிப் பொருள்நசையால் தம்மை
உணரார்பின் சென்று நிலை.

366. கல்லாக் கழிப்பர் தலையாயார் நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள் கடைகள்
இனிதுண்ணோம் ஆரப் பெறேமியாம் என்னும்
முனிவினாற் கண்பா டிலர்.

367. செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச்
செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல்
வயனிறையக் காய்க்கும் வளவய லு஡ர
மகனறிவு தந்தை யறிவு.

368. உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால்போல்
கீழ்மேலாய் நிற்கும் உலகு.

369. இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
தணியாத உள்ளம் உடையார் - மணிவரன்றி
வீழும் அருவி விறன்மலை நன்னாட
வாழ்வின் வரைபாய்தல் நன்று.

370. புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்புற நாடின்வே றல்ல - புதுப்புனலும்
மா஡஢ அறவே அறுமே, அவரன்பும்
வா஡஢ அறவே அறும்.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework