தூமலர்த் தாமரைப் பூவின் அங்கண்மாஇதழ்க் குவளை மலர்பிணைத் தன்ன
திருமுகத்து அலமரும் பெருமதர் மழைக்கண்
அணிவளை முன்கை ஆயிதழ் மடந்தை
வார்முலை முற்றத்து நூலிடை விலங்கினும் 5
கவவுப்புலந்து உறையும் கழிபெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியிற் சிறந்ததொன்று இல்லென
அன்பால் மொழிந்த என்மொழி கொள்ளாய்
பொருள்புரி வுண்ட மருளி நெஞ்சே!-
கரியாப் பூவின் பெரியோர் ஆர 10
அழலெழு தித்தியம் மடுத்த யாமை
நிழலுடை நெடுங்கயம் புகல்வேட் டாஅங்கு
உள்ளுதல் ஓம்புமதி இனிநீ முள்ளெயிற்றுச்
சின்மொழி அரிவை தோளே- பன்மலை
வெவ்வறை மருங்கின் வியன்சுரம்
எவ்வம் கூர இறந்தனம் யாமே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework