பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகியசெறிமடை அம்பின், வல்வில், கானவன்
பொருதுதொலை யானை வெண்கோடு கொண்டு,
நீர்திகழ் சிலம்பின் நன்பொன் அகழ்வோன்,
கண்பொருது இமைக்கும் திண்மணி கிளர்ப்ப, 5
வைந்நுதி வால்மருப்பு ஒடிய உக்க
தெண்நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு
சாந்தம் பொறைமரம் ஆக, நறைநார்
வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு 10
இன்தீம் பலவின் ஏர்கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர்வாய்
அம்பல் ஊரும் அவனொடு மொ´ியும்;
சாயிறைத் திரண்ட தோள்பா ராட்டி,
யாயும், 'அவனே என்னும்; யாமும், 15
'வல்லே வருக, வரைந்த நாள்; 'என,
நல்இறை மெல்விரல் கூப்பி,
இல்லுறை கடவுட்கு ஓக்குதும், பலியே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework