இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப்புலவுநாறு புகர்நுதல் கழுவக், கங்குல்
அருவி தந்த அணங்குடை நெடுங்கோட்டு
அஞ்சுவரு விடர்முகை ஆர்இருள் அகற்றிய,
மின்ஒளிர் எஃகம் செல்நெறி விளக்கத், 5
தனியன் வந்து, பனிஅலை முனியான்
நீர்இழி மருங்கின் ஆர்இடத்து அமன்ற
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி
அசையா நாற்றம் அசைவளி பகரத்
துறுகல் நண்ணிய கறிஇவர் படப்பைக் 10
குறிஇறைக் குரம்பைநம் மனைவயின் புகுதரும்,
மெய்ம்மலி உவகையன்; அந்நிலை கண்டு,
'முருகு' என உணர்ந்து, முகமன் கூறி,
உருவச் செந்தினை நீரொடு தூஉய்,
நெடுவேள் பரவும், அன்னை, அன்னோ! 15
என்ஆ வதுகொல் தானே - பொன்னென
மலர்ந்த வேங்கை அலங்குசினை பொலிய
மணிநிற மஞ்ஜை அகவும்
அணிமலை நாடனொடு அமைந்தநம் தொடர்பே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework