நெடுமலை அடுக்கம் கண்கெட மின்னிப்படுமழை பொழிந்த பானாட் கங்குல்,
குஞ்சரம் நடுங்கத் தாக்கிக், கொடுவரிச்
செங்கண் இரும்புலி குழுமும் சாரல்
வாரல் - வாழியர், ஐய! நேர்இறை 5
நெடுமென் பணைத்தோள் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே; நாளை
மந்தியும் அறியா மரம்பயில் இறும்பின்
ஒண்செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண்
தண்பல் அருவித் தாழ்நீர் ஒருசிறை, 10
உருமுச் சிவந்து எறிந்த உரன்அழி பாம்பின்
திருமணி விளக்கிற் பெறுகுவை-
இருள்மென் கூந்தல் ஏமுறு துயிலே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework