141. உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்
குடிப்பிறப் பாளர்தம் கொள்கையில் குன்றார்
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அ஡஢மா
கொடிப்புல் கறிக்குமோ மற்று.

142. சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இநவ்முன்றும்
வான்றோய் குடிப்பிறந்தார்க் கல்லது - வான்றோயும்
மைதவழ் வேற்ப. படாஅ பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு.

143. இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப ஒழிதலோ டின்ன - குடிப்பிறந்தார்
குன்றா வொழுக்கமாக் கொண்டார் கயவரோடு
ஒன்றா வுணரற்பாற் றன்று.

144. நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை
பல்லவர் து஡ற்றம் பழியாகும் - எல்லாம்
உணரும் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ,
புணரும் ஒருவர்க் கெனின்?

145. கல்லாமை அச்சம் கயவர் தொழிலச்சம்
சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம் - எல்லாம்
இரப்பார்க்கொன் றீயாமை அச்சம் மரத்தா஡஢ம்
மாணாக் குடிப்பிறந் தார்.

146. இனநன்மை இன்சொல்ஒன் றீதல்மற் றேனை
மனநன்மை என்றிவை யெல்லாம் - கனமணி
முத்தோ டிமைக்கு முழங்குவா஢த் தண்சேர்ப்ப
இற்பிறந்தார் கண்ணே யுள.

147. செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
பெய்யா ஒருசிறை போ஢ல் உடைத்தாகும்
எவ்வ முழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
செய்வர் செயற்பா லவை.

148. ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறு஡உம் - திங்கள்போல்
செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கார் குடிப்பிறந் தார்.

149. செல்லா விடத்தும் குடிப்பிறந்தார் செய்வன
செல்லிடத்தும் செய்யார் சிறியவர் - புல்வாய்
பருமம் பொறுப்பினும் பாய்பா஢ மாபோல்
பொருமுரண் ஆற்றுதல் இன்று.

150. எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
அற்றத்தற் சேர்ந்தார்க் கசைவிடத் து஡ற்றாவர்
அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால்
தெற்றெனத் தெண்ணீர் படும்.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework