191. கோளாற்றக் கொள்ளாக் குளத்தின்கீழ்ப் பைங்கூழ்போல்
கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப
வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும்
தாளாளர்க் குண்டோ தவறு.

192. ஆடுகோ டாகி அதா஢டை நின்றது஡உம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்றான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்.

193. உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
சிறுதேரை பற்றியும் தின்னும் - அறிவினால்
காற்றொழில் என்று கருதற்க கையினால்
மேற்றொழிலும் ஆங்கே மிகும்.

194. இசையா தெனினும் இயற்றியோ ராற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை - இசையுங்கால்
கண்டால் திரையலைக்கும் கானலந் தண்சேர்ப்ப
பெண்டிரும் வாழாரோ மற்று.

195. நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
சொல்லள வல்லால் பொருளில்லை - தொல்சிறப்பின்
ஒண்பொரு ளொன்றோ தவம்கல்வி யாள்வினை
என்றிவற்றான் ஆகும் குலம்.

196. ஆற்றும் துணையும் அறிவினை உள்ளடக்கி
ஊக்கம் உரையார் உணர்வுடையார் - ஊக்கம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மை யுடையார்
குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு.

197. சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக்
குதலைமை தந்தைகண் தோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.

198. ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானும் தலைவருவ செய்பவோ? - யானை
வா஢முகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அ஡஢மா மதுகை யவர்.

199. தீங்கரும் பீன்று திரள்கால் உளையலா஢
தேங்கமழ் நாற்றம் இழந்தாஅங்கு - ஓங்கும்
உயர்குடி யுள்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும்
பேராண்மை இல்லாக் கடை.

200. பெருமுத் தரையர் பொ஢துவந் தீயும்
கருனைச்சோ றார்வர் கயவர் - கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும்.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework