நகைநன்று அம்ம தானே அவனொடுமனைஇறந்து அல்கினும் அல'ரென நயந்து
கானல் அல்கிய நம்களவு அகல
பல்புரிந்து இயறல் உற்ற நல்வினை
நூல்அமை பிறப்பின் நீல உத்திக் 5
கொய்ம்மயிர் எருத்தம் பிணர்படப் பெருகி
நெய்ம்மிதி முனைஇய கொழுஞ்சோற்று ஆர்கை
நிரலியைந்து ஒன்றிய செலவின் செந்தினைக்
குரல்வார்ந் தன்ன க¯Šறிப் பல்படை ஒலிப்பப் பூட்டி
மதியுடைய வலவன் ஏவலின் இகுதுறைப்
புனல்பாய்ந் தன்ன வாமான் திண்தேர்க்
கணைகழிந் தன்ன நோன்கால் வண்பரிப்
பால்கண்ட டன்ன ஊதை வெண்மணற் 15
கால்கண்ட டன்ன வழிபடப் போகி
அயிர்ச்சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்
இருள்நீர் இட்டுச்சுரம் நீந்தித் துறைகெழு
மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை
பூமலி இருங்கழித் துயல்வரும் அடையொடு 20
நேமி தந்த நெடுநீர் நெய்தல்
விளையா இளங்கள் நாறப் பலவுடன்
பொதிஅவிழ் தண்மலர் கண்டும் நன்றும்
புதுவது ஆகின்று அம்ம- பழவிறல்
பாடுஎழுந்து இரங்கு முந்நீர் .
நீடிரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework