நுண் முத்தம் ஏற்றி ஆங்கு மெய் எல்லாம் வியர்த்து நொய்தின்
வண் முத்தம் நிரை கொள் நெற்றி வார் முரி புருவம் ஆக்கிக்
கண் எரி தவழ வண்கை மணி நகு கடகம் எற்றா
வெண் நகை வெகுண்டு நக்குக் கட்டியங் காரன் சொன்னான்.
258

 

என் அலால் பிறர்கள் யாரே இன்னவை பொறுக்கும் நீரார்
உன்னலால் பிறர்கள் யாரே உற்றவற்கு உறாத சூழ்வார்
மன்னன் போய்த் துறக்கம் ஆண்டு வானவர்க்கு இறைவன் ஆக
பொன் எலாம் விளைந்து பூமி பொலிய யான் காப்பல் என்றான்.
259
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework