நிலத் தலைத் திருவனாள் தன் நீப்பரும் காதல் கூர
முலைத் தலைப் போகம் மூழ்கி முகிழ் நிலா முடிகொள் சென்னி
வெலற்கு அரும் தானை நீத்த வேந்தனை வெறுமை நோக்கிக்
குலத்தொடும் கோறல் எண்ணிக் கொடியவன் கடிய சூழ்ந்தான்.
261

 

கோன் தமர் நிகளம் மூழ்கிக் கோட்டத்துக் குரங்கத் தன் கீழ்
ஏன்ற நன் மாந்தர்க்கு எல்லாம் இரு நிதி முகந்து நல்கி
ஊன்றிய நாட்டை எல்லாம் ஒரு குடை நீழல் செய்து
தோன்றினான் குன்றத்து உச்சிச் சுடர்ப் பழி விளக்கு இட்ட அன்றே.
262

 

பருமித்த களிறும் மாவும் பரந்தியல் தேரும் பண்ணித்
திருமிக்க சேனை மூதூர்த் தெருவுதொறும் எங்கும் ஈண்டி
எரி மொய்த்த வாளும் வில்லும் இலங்கு இலை வேலும் ஏந்திச்
செரு மிக்க வேலினான் தன் திருநகர் வளைந்தது அன்றே.
263
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework