கடல் படை அனுங்க வென்ற கானவர் என்னும் கூற்றத்து
இடைப் படாது ஓடிப் போமின் உய்ய என்று இரலை வாய் வைத்து
எடுத்தனர் விளியும் சங்கும் வீளையும் பறையும் கோடும்
கடத்து இடை முழங்கக் காரும் கடலும் ஒத்து எழுந்த அன்றே.
447

 

கை விசை முறுக்கி வீசும் கொள்ளியும் கறங்கும் ஏய்ப்ப
செய் கழல் குருசில் திண் தேர் விசையொடு திசைகள் எல்லாம்
ஐ என வளைப்ப வீரர் ஆர்த்தனர் அவரும் ஆர்த்தார்
மொய் அமர் நாள் செய்து ஐயன் முதல் விளையாடினானே.
448
Go to top