துறை: முல்லை
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: வினைநவில் யானை

பகைபெரு மையின் தெய்வம் செப்ப
ஆர்இறை அஞ்சா வெருவரு கட்டூர்ப்
பல்கொடி நுடங்கும் முன்பின் செறுநர்
செல்சமம் தொலைத்த *வினைநவில் யானை*
கடாஅம் வார்ந்து கடும்சினம் பொத்தி 5
வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந்(து) இயல
மறவர் மறல மாப்படை உறுப்பத்
தேர்கொடி நுடங்கத் தோல்புடை ஆர்ப்பக்
காடுகை காய்த்திய நீடுநாள் இருக்கை
இன்ன வைகல் பல்நாள் ஆகப் 10
பாடிக் காண்கு வந்திசின் பெரும
பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர்
கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர்
வண்மையும் செம்மையும் சால்பும் மறனும்
புகன்றுபுகழ்ந்(து) அசையா நல்லிசை 15
நிலம்தரு திருவின் நெடியோய் நின்னே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework