துறை: காட்சிவாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: உரைசால்வேள்வி

வலம்படு முரசின் வாய்வாள் கொற்றத்துப்
பொலம்பூண் வேந்தர் பலர்தில் அம்ம
அறம்கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய
*உரைசால் வேள்வி* முடித்த கேள்வி
அந்தணர் அரும்கலம் ஏற்ப நீர்பட்(டு) 5
இரும்சே(று) ஆடிய மணல்மலி முற்றத்துக்
களிறுநிலை முணைஇய தார்அரும் தகைப்பின்
புறம்சிறை வயி஡஢யர்க் காணின் வல்லே
எஃகுபடை அறுத்த கொய்சுவல் புரவி
அலங்கும் பாண்டில் இழைஅணிந்(து) ஈம்என 10
ஆனாக் கொள்கையை ஆதலின் அவ்வயின்
மாஇரு விசும்பில் பல்மீன் ஒளிகெட
ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார்
உறுமுரண் சிதைத்தநின் நோன்தாள் வாழ்த்திக்
காண்கு வந்திசின் கழல்தொடி அண்ணல் 15
மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல்
இதழ்வனப்(பு) உற்ற தோற்றமொ(டு) உயர்ந்த
மழையினும் பெரும்பயம் பொழிதி அதனால்
பசிஉடை ஒக்கலை ஒ஡ணஇய
இசைமேம் தோன்றல்நின் பாசறை யானே. 20
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework