தொடுதோற் கானவன் சூடுறு வியன்புனம்கரிபுறம் கழீஇய பெரும்பாட்டு ஈரத்துக்
தொடுவளர் பைந்தினை நீடுகுரல் காக்கும்
ஒண்தொடி மகளிர்க்கு ஊசல் ஆக
ஆடுசினை ஒழித்த கோடுஇணர் கஞலிய 5
குறும்பொறை அயலது நெடுந்தாள் வேங்கை
மடமயிற் குடுமியின் தோன்றும் நாடன்
உயர்வரை மருங்கின் காந்தளம் சோலைக்
குரங்குஅறி வாரா மரம்பயில் இறும்பிற்
கடிசுனைத் தெளிந்த மணிமருள் தீநீர் 10
பிடிபுணர் களிற்றின் எம்மொடு ஆடிப்
பல்நாள் உம்பர்ப் பெயர்ந்து சில்நாள்
கழியா மையே வழிவழிப் பெருகி
அம்பணை விளைந்த தேக்கட் டேறல்
வண்டுபடு கண்ணியர் மகிழும் சீறூர் 15
எவன்கொல்- வாழி, தோழி!- கொங்கர்
மணியரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன
அலர்ஆ கின்றது பலர்வாய்ப் பட்டே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework