ஆள்வினைப் பிரிதலும் உண்டோ ? பிரியினும்கேளினி- வாழிய நெஞ்சே!- நாளும்
கனவுக்கழிந் தனைய வாகி நனவின்
நாளது செலவும் மூப்பினது வரவும்
அரிதுபெறு சிறப்பின் காமத்து இயற்கையும் 5
இந்நிலை அறியாய் ஆயினும் செந்நிலை
அமைஆடு அங்கழை தீண்டிக் கல்லென
ஞெமைஇலை உதிர்த்த எரிவாய்க் கோடை
நெடுவெண் களரி நீறுமுகந்து சுழலக்
கடுவெயில் திருகிய வேனில்வெங் காட்டு 10
உயங்குநடை மடப்பிணை தழீஇய வயங்குபொறி
அறுகோட்டு எழிற்கலை அறுகயம் நோக்கித்
தெண்நீர் வேட்ட சிறுமையின் தழைமறந்து
உண்நீர் இன்மையின் ஒல்குவன தளர
மரம்நிழல் அற்ற இயவின் சுரனிறந்து 15
உள்ளுவை அல்லையோ மற்றே- உள்ளிய
விருந்து ஒழிவு அறியாப் பெருந்தண் பந்தர்
வருந்தி வருநர் ஓம்பித் தண்ணெனத்
தாதுதுகள் உதிர்த்த தாழைஅம் கூந்தல்
வீழ்இதழ் அலரி மெல்லகம் சேர்த்தி 20
மகிழ்அணி முறுவல் மாண்ட சேக்கை
நம்மொடு நன்மொழி நவிலும்
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework