யாஅ ஒண்தளிர் அரக்குவிதிர்த் தன்னநின்ஆக மேனி அம்பசப்பு ஊர
அழிவுபெரிது உடையை யாகி அவர்வயின்
பழிதலைத் தருதல் வேண்டுதி மொழிகொண்டு
தாங்கல் ஒல்லுமோ மற்றே ஆங்குநின் 5
எவ்வம் பெருமை உரைப்பின் செய்பொருள்
வயங்காது ஆயினும் பயம்கெடத் தூக்கி
நீடலர்- வாழி, தோழி!- கோடையிற்
குருத்திறுபு உக்க வருத்தம் சொலாது
தூம்புடைத் துய்த்தலைக் கூம்புபு திரங்கிய 10
வேனில் வெளிற்றுப்பனை போலக் கையெடுத்து
யானைப் பெருநிரை வானம் பயிரும்
மலைச்சேண் இகந்தனர் ஆயினும் நிலைபெயர்ந்து
நாள்இடைப் படாமை வருவர் நமர்எனப்
பயம்தரு கொள்கையின் நயம்தலை திரியாது 15
நின்வாய் இன்மொழி நன்வா யாக
வருவர் ஆயினோ நன்றே வாராது
அவணர் காதலர் ஆயினும் இவண்நம்
பசலை மாய்தல் எளிதுமன் தில்ல
சென்ற தேஎத்துச் செய்வினை முற்றி 20
மறுதரல் உள்ளத்தர் எனினும்
குறுகுபெரு நசையொடு தூதுவரப் பெறினே

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework