கடல்பாடு அவிந்து தோணி நீங்கி,நெடுநீர் இருங்கழிக் கடுமீன் கலிப்பினும்;
செவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்,
மாண்இழை நெடுந்தேர் பாணி நிற்பப்,
பகலும் நம்வயின் அகலா னாகிப் 5
பயின்றுவரும் மன்னே, பனிநீர்ச் சேர்ப்பன்,
இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி,
"வாராதோர் நமக்கு யாஅர்?" என்னாது,
மல்லன் மூதூர் மறையினை சென்று,
சொல்லின் எவனோ - பாண! 'எல்லி 10
மனைசேர் பெண்ணை மடிவாய் அன்றில்
துணைஒன்று பிரியினும் துஞ்சா காண்' எனக்
கண்நிறை நீர்கொடு கரக்கும்
ஒண்நுதல் அரிவை "யான் என் செய்கோ?" எனவே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework