அகநானூறு

 

அகநானூறு அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது. இது பல்வேறு புலவர்கள் வெவ்வேறு காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன.
அகத் த்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.

இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.

கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன.இவை களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன. ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைபட எண்களில் 6 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.

 

களிற்றியாணை நிரை

    1. கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த்
    2. வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல்,
    3. கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை
    4. இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன
    5. முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
    6. அளிநிலை பொறா அது அமரிய முகத்தள்
    7. அரிபெய் சிலம்பின் ஆம்பலந் தொடலை
    8. முலைமுகம் செய்தன; முள்ளெயிறு இலங்கின;
    9. ஈயற் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த
    10. கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறு புழுகின்,
    11. வான்கடற் பரப்பில் தூவற்கு எதிரிய
    12. வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
    13. யாயே கண்ணினும் கடுங் காதலளே
    14. தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்
    15. அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி
    16. எம்வெங் காமம் இயைவது ஆயின்
    17. நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
    18. வளம்கெழு திருநகர்ப் பந்து சிறிது எறியினும்
    19. நீர்நிறம் கரப்ப ஊழுறுபு உதிர்ந்து,
    20. அன்றுஅவண் ஒழிந்தன்றும் இலையே; வந்துநனி
    21. பெருநீர் அழுவத்து எந்தை தந்த
    22. மனைஇள நொச்சி மௌவல் வால்முகைத்
    23. அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும்
    24. மண்கண் குளிர்ப்ப வீசி தண்பெயல்
    25. வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
    26. நெடுங்கரைக் கான்யாற்றுக் கடும்புனல் சாஅய
    27. கூன்முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற
    28. கொடுவரி இரும்புலி தயங்க நெடுவரை
    29. மெய்யின் தீரா மேவரு காமமொடு
    30. தொடங்கு வினை தவிர அசைவில் நோன்தாள்,
    31. நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலை
    32. நெருப்புஎனச் சிவந்த உருப்புஅவிர் மண்டிலம்
    33. நெருநல் எல்லை ஏனல் தோன்றிச்
    34. வினைநன் றாதல் வெறுப்பக் காட்டி
    35. சிறுகரும் பிடவின் வெண்தலைக் குறும்புதல்
    36. ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்
    37. பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக்
    38. மறந்து அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக்
    39. விரிஇணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்
    40. ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்படர்ந்து
    41. கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப,
    42. வைகுபுலர் விடியல், மைபுலம் பரப்பக்,
    43. மலிபெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
    44. கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை
    45. வந்துவினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
    46. வாடல் உழுஞ்சில் விளைநெற்று அம்துணர்
    47. சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
    48. அழிவில் உள்ளம் வழிவழிச் சிறப்ப
    49. அன்னாய்! வாழி! வேண்டு அன்னை! நின்மகள்
    50. கிளியும் பந்தும், கழங்கும், வெய்யோள்
    51. கடல்பாடு அவிந்து தோணி நீங்கி,
    52. ஆள்வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர்தெற
    53. வலந்த வள்ளி மரன்ஓங்கு சாரல்
    54. அறியாய் வாழி, தோழி! இருள்அற
    55. விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப
    56. காய்ந்துசெலற் கனலி கல்பகத் தெறுதலின்
    57. நகை ஆகின்றே - தோழி! - நெருநல்-
    58. சிறுபைந் தூவிச் செங்காற் பேடை
    59. இன்இசை உருமொடு கனைதுளி தலைஇ
    60. தண்கயத்து அமன்ற வண்டுபடு துணைமலர்ப்
    61. பெருங்கடற் பரப்பில் சேயிறா நடுங்கக்
    62. நோற்றோர் மன்ற தாமே கூற்றங்
    63. அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
    64. கேளாய் வாழியோ மகளை! நின் தோழி
    65. களையும் இடனாற் - பாக! உளை அணி
    66. உன்னங் கொள்கையொடு உளம்கரந்து உறையும்
    67. இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
    68. யான்எவன் செய்கோ? தோழி! பொறிவரி
    69. அன்னாய்! வாழி வேண்டு அன்னை! நம் படப்பைத்
    70. ஆய்நலம் தொலைந்த மேனியும் மாமலர்த்
    71. கொடுந்திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென
    72. நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர்
    73. இருள்கிழிப் பதுபோல் மின்னி வானம்
    74. பின்னொடு முடித்த மண்ணா முச்சி
    75. வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து
    76. அருள் அன்று ஆக ஆள்வினை, ஆடவர்
    77. மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்கத்
    78. நல்நுதல் பசப்பவும் ஆள்வினை தரீஇயர்,
    79. நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி
    80. தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர்
    81. கொடுந்தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்
    82. நாள்உலா எழுந்த கோள்வல் உளியம்
    83. ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
    84. வலம்சுரி மராஅத்துச் சுரம்கமழ் புதுவீச்
    85. மலைமிசைக் குலஇய உருகெழு திருவில்
    86. நன்னுதல் பசப்பவும் பெருந்தோள் நெகிழவும்
    87. உழுந்துதலைப் பெய்த கொழுங்கனி மிதவை
    88. தீந்தயிர் கடைந்த திரள்கால் மத்தம்
    89. முதைச்சுவற் கலித்த மூரிச் செந்தினை
    90. தெறுகதிர் ஞாயிறு நடுநின்று காய்தலின்
    91. மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி
    92. விளங்குபகல் உதவிய பல்கதிர் ஞாயிறு
    93. நெடுமலை அடுக்கம் கண்கெட மின்னிப்
    94. கேள்கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்
    95. தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
    96. பைப்பயப் பசந்தன்று நுதலும்; சாஅய்
    97. நறவுண் மண்டை நுடக்கலின் இறவுக்கலித்துப்
    98. கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலை
    99. பனிவரை நிவந்த பயம்கெழு கவாஅன்
    100. வாள்வரி வயமான் கோள்உகிர் அன்ன
    101. அரையுற்று அமைந்த ஆரம் நீவிப்
    102. அம்ம வாழி தோழி! இம்மை
    103. உளைமான் துப்பின் ஓங்குதினைப் பெரும்புனத்துக்
    104. நிழல்அறு நனந்தலை எழில்ஏறு குறித்த
    105. வேந்துவினை முடித்த காலைத் தேம்பாய்ந்து
    106. அகல்அறை மலர்ந்த அரும்புமுதிர் வேங்கை
    107. எரிஅகைந் தன்ன தாமரைப் பழனத்துப்
    108. நீசெலவு அயரக் கேட்டொறும் பலநினைந்துஅப் பொறை மெலிந்த
    109. புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு
    110. பல்இதழ் மென்மலர் உண்கண் நல்யாழ்
    111. அன்னை அறியினும் அறிக; அலர்வாய்
    112. உள் ஆங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர்
    113. கூனல் எண்கின் குறுநடைத் தொழுதி
    114. நன்றுஅல் காலையும் நட்பின் கோடார்
    115. கேளாய் எல்ல! தோழி! வேலன்
    116. அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்ப்
    117. எரியகைந் தன்ன தாமரை இடைஇடை
    118. மௌவலொடு மலர்ந்த மாக்குரல் நொச்சியும்
    119. கறங்குவெள் அருவி பிறங்குமலைக் கவாஅன்
    120. நுதலும் தோளும், திதலை அல்குலும்,
    121. நெடுவேள் மார்பின் ஆரம் போலச்

மணிமிடை பவளம்

    1. நாம்நகை யுடையம் நெஞ்சே!- கடுந்தெறல்
    2. நாம்நகை யுடையம் நெஞ்சே!- கடுந்தெறல்
    3. உண்ணா மையின் உயங்கிய மருங்கின்
    4. நன்கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி
    5. அரம்போழ் அவ்வளை தோள்நிலை நெகிழ
    6. நினவாய் செத்து நீபல உள்ளிப்
    7. இலங்குவளை நெகிழச் சாஅய் அல்கலும்,
    8. மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே;
    9. உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என
    10. அம்ம வாழி கேளிர்! முன்நின்று
    11. விசும்புற நிவந்த மாத்தாள் இதணைப்
    12. ஏனலும் இறங்குகுரல் இறுத்தன; நோய்மலிந்து
    13. குன்றி அன்ன கண்ண குருஉமயிர்ப்,
    14. வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
    15. திதலை மாமை தளிர்வனப்பு அழுங்கப்
    16. மைப்புஅறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
    17. ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத்து உண்ட
    18. இகுளை! கேட்டிசின் காதலம் தோழி !
    19. துஞ்சுவது போலஇருளி விண்பக
    20. பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
    21. அம்ம வாழி தோழி ! கைம்மிகக்
    22. இலமலர் அன்ன அம்செந் நாவிற்
    23. செய்வினைப் பிரிதல் எண்ணிக் கைம்மிகக்
    24. வருதும் என்ற நாளும் பொய்த்தன;
    25. வேர்முழுது உலறி நின்ற புழற்கால்
    26. வலிமிகு முன்பின் அண்ணல் ஏஎறு
    27. ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
    28. பனைத்திரள் அன்ன பருஏர் எறுழ்த் தடக்கைச்
    29. சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த;
    30. பின்னுவிட நெறித்த கூந்தலும் பொன்னென
    31. தம்நயந்து உறைவோர்த் தாங்கித் தாம்நயந்து
    32. நெஞ்சுநடுங்கு அரும்படர் தீர வந்து
    33. நோகோ யானே; நோதகும் உள்ளம்;
    34. படுமழை பொழிந்த பயமிகு புறவின்
    35. அறன்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும்
    36. முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும்
    37. அரியற் பெண்டிர் அலகுற் கொண்ட
    38. உருமுரறு கருவிய பெருமழை தலைஇப்
    39. தெண்கழி விளைந்த வெண்கல் உப்பின்
    40. ஒடுங்கீர் ஓதி நினக்கும் அற்றே?
    41. வினைவயிற் பிரிதல் யாவது?- வணர்சுரி
    42. கொளக்குறை படாஅக் கோடுவளர் குட்டத்து
    43. விண்அதிர்பு தலைஇய விரவுமலர் குழையத்
    44. கதிர்கை யாக வாங்கி ஞாயிறு
    45. கயந்தலை மடப்பிடி பயம்பில் பட்டெனக்
    46. நல்மரங் குழீஇய நனைமுதிர் சாடி
    47. வயங்குமணி பொருத வகையமை வனப்பின்
    48. யாமம் நும்மொடு கழிப்பி நோய்மிக,
    49. மரம்தலை கரிந்து நிலம்பயம் வாட
    50. கானலும் கழறாது: கழியும் கூறாது:
    51. நுதலும் நுண்பசப்பு இவரும் தோளும்
    52. வாரணம் உரறும் நீர்திகழ் சிலம்பில்
    53. அறம் தலைப்பிரியாது ஒழுகலும் சிறந்த
    54. வீங்கு விளிம்பு உரீஇய விசைஅமை நோன்சிலை
    55. கடல்கண் டன்ன கண்அகன் பரப்பின்
    56. தொன்னலம் சிதையச் சாஅய் அல்கலும்
    57. வயிரத் தன்ன வைஏந்து மருப்பின்
    58. விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
    59. நகைநனி உடைத்தால் - தோழி ! தகைமிக
    60. துன்அருங் கானமும் துணிதல் ஆற்றாய்
    61. பூங்கண் வேங்கைப் பொன்னிணர் மிலைந்து
    62. குவளை உண்கண் கலுழவும் திருந்திழைத்
    63. கடவுட் கற்பொடு குடிக்குவிளக்கு ஆகிய
    64. எல்வளை ஞெகிழச் சாஅய் ஆய்இழை
    65. வானம் வேண்டா வறனில் வாழ்க்கை
    66. தோள்புலம்பு அகலத் துஞ்சி நம்மொடு
    67. பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ!
    68. பசும்பழப் பலவின் கானம் வெம்பி
    69. திரைஉழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு
    70. அத்தப் பாதிரித் துய்த்தலைப் புதுவீ
    71. மதிஇருப் பன்ன மாசுஅறு சுடர்நுதல்
    72. கானுயர் மருங்கில் கவலை அல்லது
    73. பேர்உறை தலைஇய பெரும்புலர் வகைறை
    74. அருஞ்சுரம் இறந்தஎன் பெருத்தோட் குறுமகள்
    75. நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி பாக்கத்து
    76. மாமலர் வண்ணம் இழந்த கண்ணும்
    77. கூறுவம் கொல்லோ? கூறலம் கொல்? எனக்
    78. கரைபாய் வெண்திரை கடுப்பப் பலஉடன்,
    79. நிலாவின் இலங்கு மணல்மலி மறுகில்
    80. அம்ம வாழி - தோழி - பொன்னின்
    81. வயங்குவெள் அருவிய குன்றத்துக் கவாஅன்
    82. உவக்குநள் ஆயினும் உடலுநள் ஆயினும்,
    83. உலகுடன் நிழற்றிய தொலையா வெண்குடைக்
    84. உயிர்கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின்
    85. என்னெனப் படுங்கொல்- தோழி !- நல்மகிழ்ப்
    86. அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
    87. யாம இரவின் நெடுங்கடை நின்று
    88. தோளும் தொல்கவின் தொலைந்தன; நாளும்
    89. குறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர்
    90. கேளாய் எல்ல! தோழி - வாலிய
    91. தாஇல் நன்பொன் தைஇய பாவை
    92. அகலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப்
    93. விலங்குருஞ் சிமையக் குன்றத்து உம்பர்
    94. நாண்கொள் நுண்கோலின் மீன்கொள் பாண்மகள்-
    95. பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை
    96. கிளைபா ராட்டும் கடுநடை வயக்களிறு
    97. சீர்கெழு வியனகர்ச் சிலம்புநக இயலி.
    98. ஊருஞ் சேரியும் உடன்இயைந்து அலர்எழத்
    99. நனைவிளை நறவின் தேறல் மாந்திப்
    100. வானுற நிவந்த நீல்நிறப் பெருமலைக்
    101. பிரிதல் வல்லியர்; இது நத் துறந்தோர்
    102. செல்க பாக! எல்லின்று பொழுதே- வல்லோன் அடங்குகயிறு அமைப்பக், கொல்லன்
    103. அன்பும் மடனும், சாயலும், இயல்பும்,
    104. உணர்குவென் அல்லென்; உரையல்நின் மாயம்;
    105. நுதல்பசந் தன்றே; தோள்சா யினவே;
    106. பிரசப் பல்கிளை ஆர்ப்பக் கல்லென
    107. பகல்செய் பல்கதிர்ப் பருதியம் செல்வன்
    108. உறுகழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
    109. செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு
    110. காண்இனி- வாழி தோழி!- பானாள்,
    111. அலமரல் மழைக்கண் மல்குபனி வார நின்
    112. கார்பயம் பொழிந்த நீர்திகழ் காலை
    113. அம்ம- வாழி தோழி!- பொருள் புரிந்து
    114. மணிமருள் மலர முள்ளி அமன்ற
    115. புன்காற் பாதிரி அரிநிறத் திரள்வீ
    116. மான்றமை அறியா மரம்பயில் இடும்பின்
    117. அளிதோ தானே; எவன்ஆ வதுகொல்!
    118. செவ்வீ ஞாழற் கருங்கோட்டு இருஞ்சினைத்
    119. துனிஇன்று இயைந்த துவரா நட்பின்
    120. அரும்புமுதிர் வேங்கை அலங்கல் மென்சினைச்
    121. அவரை ஆய்மலர் உதிரத் துவரின்
    122. பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன
    123. உயிரினும் சிறந்த ஒண்பொருள் தருமார்
    124. பிணர்மோட்டு நந்தின் பேழ்வாய் ஏற்றை
    125. இமிழிசை முரசம் பொருகளத்து ஒழியப்,
    126. மண்ணா முத்தம் ஒழுக்கிய வனமுலை
    127. நகைநீ கோளாய்- தோழி!- அல்கல்
    128. அம்ம- வாழி தோழி!- பல்நாள்
    129. எவன்கொல்?- வாழி தோழி!- மயங்குபிசிர்
    130. தூதும் சென்றன; தோளும் செற்றும்;
    131. இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து
    132. வைகல் தோறும் பசலை பாய என்
    133. நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற்
    134. உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
    135. பிணங்குஅரில் வள்ளை நீடுஇலைப் பொதும்பின்
    136. வேனிற் பாதிரிக் கூனி மாமலர்
    137. நன்னன் உதியன் அருங்கடிப் பாழித்
    138. வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்;
    139. மண்டிலம் மழுக மலைநிறம் கிளர,
    140. கானப் பாதிரிக் கருந்தகட்டு ஒள்வீ
    141. முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப்
    142. தயங்குதிரைப் பெருங்கடல் உலகுதொழத் தோன்றி,
    143. மழையில் வானம் மீன்அணிந் தன்ன
    144. புகையின் பொங்கி வியல்விசும்பு உகந்து,
    145. கோடுற நிவந்த நீடுஇரும் பரப்பின்
    146. நெஞ்சு நெகிழ்தகுந கூறி அன்புகலந்து,
    147. அறியாய்- வாழி தோழி!- பொறியரிப்
    148. தொடிதோள் இவர்க! எவ்வமுந் தீர்க!
    149. இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம்
    150. பொறிவரிப் புறவின் செங்காற் சேவல்
    151. இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்துப்
    152. விசும்பு விசைத்துஎறிந்த கூதளங் கோதையிற்
    153. இருவிசும்பு அதிர முழங்கி அரநலிந்து,
    154. ஓங்குநிலைத் தாழி மல்கச் சார்த்திக்
    155. நீளிரும் பொய்கை இரைவேட்டு எழுந்த
    156. தண்கதிர் மண்டிலம் அவிர்அறச் சாஅய்ப்
    157. குணகடல் முகந்த கொள்ளை வானம்
    158. நட்டோ ர் இன்மையும் கேளிர் துன்பமும்,
    159. பொன் அடர்ந் தன்ன ஒள்ளிணர்ச் செருந்திப்
    160. செய்வது தெரிந்திசின்- தோழி! அல்கலும்
    161. பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய
    162. நன்னெடுங் கதுப்பொடு பெருந்தோள் நீவிய!
    163. சிறியிலை நெல்லிக் காய்கண் டன்ன
    164. ஒழியச் சென்மார் செல்ப என்று, நாம்
    165. வெள்ளி விழுந்தொடி மென்கருப்பு உலக்கை
    166. தொடிஅணி முன்கைத் தொகுவிரல் குவைஇப்
    167. சென்மதி; சிறக்க; நின் உள்ளம்! நின்மலை
    168. சிலைஏ றட்ட கணைவீழ் வம்பலர்
    169. குடுமிக் கொக்கின் பைங்காற் பேடை
    170. வானம் யெல்வளம் கரப்பக் கானம்
    171. கூறாய் செய்வது தோழி! வேறுஉணர்ந்து,
    172. இலைஒழித்து உலறிய புன்தலை உலவை
    173. மங்குல் மாமழை விண்அதிர்பு முழங்கித்
    174. நிலம்நீர் அற்று நீள்சுனை வறப்பக்
    175. கோதை இணர குறுங்கால், காஞ்சிப்
    176. பானாட் கங்குலும் பெரும்புன் மாலையும்,
    177. பயங்கெழு திருவின் பல்கதிர் ஞாயிறு
    178. எல்லையும் இரவும் வினைவயின் பிரிந்த
    179. நாள்வலை முகந்த கோள்வல் பரதவர்

நித்திலக்கோவை

  1. வறன் உறு செய்யின் வாடுபு வருந்திப்
  2. சிலம்பிற் போகிய செம்முக வாழை
  3. இடைபிறர் அறிதல் அஞ்சி மறைகரந்து
  4. இருவிசும்பு இவர்ந்த கருவி மாமழை
  5. பகலினும் அகலா தாகி யாமம்
  6. பெரும்பெயர் மகிழ்ந! பேணா தகன்மோ!
  7. சிறுநுதல் பசந்து பெருந்தோள் சாஅய்
  8. உழுவையொ டுழந்த உயங்குநடை ஒருத்தல்
  9. வயவாள் எறிந்து வில்லின் நீக்கி
  10. கடுந்தேர் இளையரொடு நீக்கி நின்ற
  11. இரும்பிடிப் பரிசிலர் போலக் கடைநின்று
  12. நெஞ்சுடன் படுதலின் ஒன்றுபுரிந் தடங்கி
  13. இனிப்பிறி துண்டோ ? அஞ்சல் ஓம்பென!
  14. நீலத் தன்ன நீர்பொதி கருவின்
  15. கூழையுங் குறுநெறிக் கொண்டன முலையும்
  16. துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
  17. மாக விசும்பின் மழைதொழில் உலந்தெனப்
  18. கான மானதர் யானையும் வழங்கும்
  19. மணிவாய்க் காக்கை மாநிறப் பெருங்கிளை
  20. ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇத்
  21. பசித்த யானைப் பழங்கண் அன்ன
  22. வயங்குவெயில் ஞெமியப் பாஅய் மின்னுவசிபு
  23. இம்மென் பேர் அலர் இவ்வூர் நம்வயின்
  24. விருந்தும் பெறுகுநள் போலும் திருந்திழைத்
  25. அம்ம! வாழி தோழி! காதலர்
  26. ஊரல் அவ்வாய் உருத்த தித்திப்
  27. இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
  28. வழையமல் அடுக்கத்து வலனேர்பு வயிரியர்
  29. பூங்கணும் நுதலும் பசப்ப நோய்கூர்ந்து
  30. கழிப்பூக் குற்றுங் கானல் அல்கியும்
  31. நீடுநிலை அரைய செங்குழை இருப்பைக்
  32. முளைவளர் முதல மூங்கில் முருக்கிக்
  33. யாஅ ஒண்தளிர் அரக்குவிதிர்த் தன்னநின்
  34. ஓடா நல்லேற்று உரிவை தைஇய
  35. இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
  36. குழற்காற் சேம்பின் கொழுமடல் அகலிலைப்
  37. சாரல் யாஅத்து உயர்சினை குழைத்த
  38. குன்றேங்கு வைப்பின் நாடுமீக் கூறும்
  39. வீங்குவிசைப் பிணித்த விரைபரி நெடுந்தேர்
  40. பன்னாள் எவ்வம் தீரப் பகல்வந்து
  41. உய்தகை இன்றால்- தோழி- பைபயக்
  42. ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலை
  43. வாங்குஅமை புரையும் வீங்குஇறைப் பணைத்தோள்
  44. வளமழை பொழிந்த வால்நிறக் களரி
  45. விசும்புதளி பொழிந்து வெம்மை நீங்கித்
  46. நகைநன்று அம்ம தானே- இறைமிசை
  47. தோளும் தொல்கவின் தொலைய நாளும்
  48. என்ஆ வதுகொல் தானே- முன்றில்
  49. அரம்போழ் அவ்வளை செறிந்த முன்கை
  50. கழியே சிறுகுரல் நெய்தலொடு காவிகூம்ப
  51. வேற்றுநாட்டு உறையுள் விருப்புறப் பேணி
  52. முடவுமுதிர் பலவின் குடம்மருள் பெரும்பழம்
  53. ஆள்வினைப் பிரிதலும் உண்டோ ? பிரியினும்
  54. மதவலி யானை மறலிய பாசறை
  55. மாவும் வண்தளிர் ஈன்றன குயிலும்
  56. மேல்துறைக் கொளீஇய கழாலின் கீழ்த்துறை
  57. கொடுமுள் ஈங்கைச் சூரலொடு மிடைந்த
  58. நீலத்து அன்ன நிறம்கிளர் எருத்தின்
  59. பனிவார் உண்கணும் பசந்த தோளும்
  60. பல்பூந் தண்பொழில் பகல்உடன் கழிப்பி
  61. தூமலர்த் தாமரைப் பூவின் அங்கண்
  62. பாம்புடை விடர பனிநீர் இட்டுத்துறை
  63. நிறைசெலல் இவுளி விரைவுடன் கடைஇ
  64. மாதிரம் புதையப் பாஅய்க் கால்வீழ்த்து
  65. அகல்வாய் வானம் ஆலிருள் பரப்ப
  66. தாழ்சினை மருதம் தகைபெறக் கவினிய
  67. இலங்குசுடர் மண்டிலம் புலந்தலைப் பெயர்ந்து
  68. தொடுதோற் கானவன் சூடுறு வியன்புனம்
  69. கண்டிசின்- மகளே!- கெழீஇ இயைவெனை
  70. வளைவாய்க் கோதையர் வண்டல் தைஇ
  71. அவ்விளிம்பு உரீஇய விசையமை நோன்சிலை
  72. அருந்தெறன் மரபின் கடவுள் காப்பப்
  73. முனைகவர்ந்து கொண்டெனக் கலங்கிப் பீர்எழுந்து
  74. மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி
  75. சென்று நீடுநர் அல்லர்; அவர்வயின்
  76. செல்லல் மகிழ்ந! நிற் செய்கடன் உடையென்மன்-
  77. கோடை நீடலின் வாடுபுலத்து உக்க
  78. நிதியம் துஞ்சும் நிவந்தோங்கு வரைப்பின்
  79. நந்நயந்து உறைவி தொன்னலம் அழியத்
  80. தேர்சேண் நீக்கித் தமியன் வந்து நும்
  81. ஆளி நன்மான் அணங்குடை ஒருத்தல்
  82. பிறருறு விழுமம் பிறரும் நோப
  83. தற்புரந்து எடுத்த எற்றுந்து உள்ளாள்
  84. இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்
  85. தன்னோ ரன்ன ஆயமும் மயிலியல்
  86. பொய்கை நீர்நாய்ப் புலவுநாறு இரும்போத்து
  87. திருந்திழை நெகிழ்ந்து பெருந்தோள் சாஅய்
  88. அம்ம!- வாழி தோழி!- நம்மலை
  89. அறியாய்- வாழி தோழி!- நெறிகுரல்
  90. உவர்விளை உப்பின் கொள்ளை சாற்றி
  91. பார்வல் வெருகின் கூர்எயிற்று அன்ன
  92. தாழ்பெருந் தடக்கை தலைஇய கானத்து
  93. கோடுயர் பிறங்கற் குன்றுபல நீந்தி
  94. களவும் புளித்தன; விளவும் பழுநின;
  95. தண்கயம் பயந்த வண்காற் குவளை
  96. தொடுத்தேன் மகிழ்ந! செல்லல்- கொடித்தேர்ப்
  97. என்மகள் பெருமடம் யான்பா ராட்டத்
  98. இழைநிலை நெகிழ்ந்த எவ்வம் கூரப்
  99. சிமைய குரல சாந்துஅருந்தி இருளி
  100. நகைநன்று அம்ம தானே அவனொடு
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework