செல்வம் உடையார் எனப்படுவர்

காவோ டறக்குளம் தொட்டானும் நாவினால்
வேதம் கரைகண்ட பார்ப்பானும் - தீதிகந்து
ஒல்வதுபாத் துண்ணும் ஒருவனும் இம்மூவர்
செல்வர் எனப்படு வார்.